தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத்தின் விதிமுறைகளின் படி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தல், கிள்ளுதல், அறைதல், நிற்க வைத்தல், முட்டி போட வைத்தல் மற்றும் அறைக்குள் அடைத்தல் உள்ளிட்டவை தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையை கிண்டலாக பேசுதல், பெயரைக் கூப்பிட்டு திட்டுதல், இழிவாக பேசுதல் மற்றும் பின்னணியை வைத்து திட்டுதல் ஆகியவற்றை தவறு என்றும் எதிர்பார்த்த மதிப்பெண் பெறாததை சுட்டிக்காட்டி குறைவாக பேசக்கூடாது என்றும் கூறியுள்ளது.

தண்டனை வழங்கும் போக்குடைய பள்ளிகளுக்கு NOC வழங்கப்படுவது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.