தமிழ் சினிமாவில் “கொலை” என்ற படத்தில் மூலமாக அறிமுகமானவர் தான் மீனாட்சி சவுத்ரி. அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன், விஜய்யின் கோட், துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட அனைத்து படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்த இவர் சமீபத்தில் சங்கராந்தி வஸ்துனம் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் கடந்த வருடம் தனக்கு சிறப்பாக அமைந்ததாக மீனாட்சி சவுத்ரி கூறியுள்ளார். அதாவது “2024 என்னுடைய சினிமா கேரியரில் ஒரு சிறப்பான ஆண்டு. சினிமாவில் பல வருடங்கள் அனுபவம் இருந்தும் பலருக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் என்னுடைய கேரியரின் ஆரம்பத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.