ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் இன்று பேசிய PM  நரேந்திர மோடி, “சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை கண்காணிப்பிற்காக ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை தொடங்க வேண்டும். எரிபொருள் கலப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பிற்காக உலக அளவிலான முன்னெடுப்புகள் நடைபெற வேண்டும். சர்வதேச உயரிய எரிபொருள் கூட்டமைப்பை துவங்குவதாகவும், முன்னெடுப்பில் அனைவரும் இணைய வேண்டும் இந்த முயற்சியில் ஜி20 நாடுகள் சேரவேண்டும் என தெரிவித்துள்ளார்.