செங்கோட்டையில் மொத்தமுள்ள 24 கவுன்சிலர்களில் 19 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி மனு அளித்துள்ளனர். திமுகவைச்  சேர்ந்த நகராட்சி தலைவிக்கு எதிராக திமுக கவுன்சிலர்களும் மனு அளித்துள்ளனர்.

செங்கோட்டை நகராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி ஆணையரிடம் கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியை பொருத்தவரை மொத்தமுள்ள 24 வார்டு உறுப்பினர்களில் தற்போது அதிமுக, பாஜக மற்றும் திமுகவை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 19 நபர்கள் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். அதாவது செங்கோட்டை  நகராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி அவர்கள் அந்த ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுயேச்சையாக வெற்றிபெற்ற ராமலட்சுமி அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் வளர்ச்சிப்பணிகளை அதிமுகவினர் தடுப்பதாகக் கூறி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.