கடந்த ஏழாம் தேதி காசாவில் செயல்பட்டு வந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுத்தது. இதனால் தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ் அமைப்புக்கு ஈரானும் ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது.

இந்த மோதலில் ஏராளமான உயிர்கள் பலியான நிலையில் ஐநாவின் பொது செயலாளர் ஆண்டனியோ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மனிதாபிமான அடிப்படையில் இரண்டு வேண்டுகோளை முன் வைப்பதாகவும் ஹமாஸ் அமைப்பினர் பணய  கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் காசாவை சேர்ந்த மக்களுக்கு மனிதநேய உதவிகள் எந்த தடையும் இன்றி விரைந்து கிடைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.