தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகாவின் டீபேக் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு டீ பேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு அருவியில் சிவப்பு நிற பிகினியில் நடிகை ராஸ்மிகா குளிப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது ராஷ்மிகா இல்லை என்பது பின்பு தெரியவந்தது. அதாவது கொலம்பியன் மாடல் அழகியான டேனியலா வில்லாரியல் பிகினி உடையில் குளிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நடிகை ராஷ்மிகாவின் முகத்தை டீபேக் மூலம் வைத்து சித்தரித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.