தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு 600 வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு நிறைவடைந்த இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை இதை விட கூடுதல் ஆகும். இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல், வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுப்பிரிவினர் 40 வயதுக்கு உள்ளேயும், எஸ்சி / எஸ்டி பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இவர்களுக்கு குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.