இந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவில் அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பல அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அந்தவகையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பட்ஜெட் குறித்து தன்னிடம் கருத்து கேட்ட நண்பரிடம், ‘பொருளாதாரத்தைப் பற்றி படிக்காத பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ என கேட்டேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவில் கூறியுள்ளார்.