தஞ்சாவூர் பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பொதுவாக  கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை பல கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் தற்போது ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும் பெண்கள் புடவை தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.