ரோகித் சர்மாவுக்கு மீண்டும் டி20 அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, பிசிசிஐ இப்போது வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் கவனம் செலுத்துகிறது. ஐபிஎல் சீசனுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிக்கான வீரர்களை பிசிசிஐ தேர்வுக்குழு படிப்படியாக சோதனை செய்து வருகிறது. இந்நிலையில், பிசிசிஐயின் முக்கிய கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ரோகித் சர்மாவுக்கு மீண்டும் டி20 அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியாவின் அட்ரஸ் கட் ஆகி மீண்டும் டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பதவியேற்பார் என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன. 

ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக உள்ளார். ஆனால் ஹர்திக் பாண்டியா சில நாட்களாக காயத்தால் அணியிலிருந்து விலகியுள்ளார். அதனால் கிட்டத்தட்ட 4 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார். இதை மனதில் வைத்து பிசிசிஐ இடைக்கால கேப்டனாக சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் 2024 ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் நேரடியாக களம் இறங்குகிறார். இந்நிலையில் பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐபிஎல் முடிந்து  சில நாட்களில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளதால் ஹர்திக்கால் இவ்வளவு குறுகிய காலத்தில் அணியை ஒழுங்கமைக்க முடியாது.  

மறுபுறம், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அதிக அனுபவம் இல்லை. எனவே டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டியில் அவரை கேப்டனாக வைத்திருக்கும் அபாயத்தை பிசிசிஐ எடுக்காது. ரோஹித் சர்மா ஒரு புத்திசாலி கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு டி20யில் நல்ல அனுபவம் உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்தது. இந்த நேரத்தில் கேப்டனாக ரோஹித் தான் சிறந்த தேர்வு என்பதை பிசிசிஐ உணர்ந்துள்ளது. இதனால் தற்போது மீண்டும் டி20 அணியின் கேப்டன் பதவியை ரோஹித் பெறுவார் என்ற பேச்சு அடிபடுகிறது.