தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். 24 வயது இளைஞரான இவர் மாணிக்கம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். தினகூலி வேலை பார்க்கும் e குடும்பம் என்பதால் வறுமையின் காரணமாக அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். 12 ஆம் வகுப்பில் 915 மதிப்பெண் எடுத்ததால் மருத்துவர் கனவை அவர்கள் அடைய முடியவில்லை. அதன் பிறகு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சீருடை பணியில் சேர்ந்தார். 2020 ஆம் வருடம் சென்னை ஆவடி பாட்டாளியலில் இரண்டாம் நிலை காவலராக பணியமர்த்தப்பட்டார். என்னதான் வேலைக்கு சென்றாலும் டாக்டர் கனவு இவரை விட்டு நீங்கவே இல்லை. இந்த நிலையில் தான் 2020 ஆம் வருடம் தமிழ்நாடு அரசு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு என்று அறிவித்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவராஜ் வேலையை விட்டுவிட்டு பெரும் கோச்சிங் சென்டர் ஒன்றில் இணைந்து படிக்க முடியாது என்பதாலும் இவரது குடும்பம் இவரின் சம்பளத்தை தான் நம்பி இருக்குது என்பதாலும் தானாகவே நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளார். நண்பர்கள் மூலம் புத்தகங்களை பெறுவது ஆன்லைன் வழியாக கிடைக்கும் மெட்டீரியல்கள் பயன்படுத்துவது என காவல்துறை பணிக்கு மத்தியிலும் இடைவிடாமல் படித்து வந்துள்ளார்.

இதன் பலனாக 2022 ஆம் வருடம் தேர்வு எழுதி 268 மதிப்பெண்கள் பெற்றார் சிவராஜ். அதனை தொடர்ந்து 2023 நீட் தேர்வு எழுதி 720க்கு 400 மதிப்பெண் பெற்று தற்போது கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இதை பார்த்த பலரும் நீ ஜெயிச்சுட்டாரா மாறா என்று இவருக்கு இணையத்தில் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.