தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நீண்ட நாள் பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்கள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குனராக முத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 100 பேர் அடிக்கடி தகவல் அளிக்காமல் அல்லது நீண்ட நாள் விடுப்பு எடுப்பது பிறகு பணிக்கு வருவது தெரியவந்துள்ளது.

அதிலும் சில ஆசிரியர்கள் எந்த ஒரு தகவலும் இல்லாமல் ஆண்டு கணக்கில் விடுமுறை எடுத்துவிட்டு சம்பளம் மட்டும் பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் வந்த நிலையில் மாவட்டம் தோறும் நீண்ட நாள் விடுப்பு எடுத்தவர்களை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் நீண்ட நாள் பணிக்கு வராமல் தகவலும் அளிக்காமல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை உடனடியாக சேகரித்து அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.