தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வு சட்டத்திற்கு எதிரானது என்ற ரிட் மனுவை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்தவிசாரணையின் போது அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்ப பெற வேண்டும் என திமுக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்று அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்று கூறி கடந்த 18-ஆம் தேதி புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நீட் தேர்வுக்கு எதிரான மனு கூடிய விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.