சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த நீட் தேர்வு சோதனையின்போது, மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்து ஒலி எழுந்ததாக கூறி உள்ளாடையை அலுவலர்கள் அகற்றச் சொல்லி இருக்கிறார்கள். வேறு வழியின்றி உள்ளாடையை அகற்றிய பிறகுதான், அந்த மாணவியை தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொன்ன இந்த விவகாரம் பற்றி எரிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ”இது ஒரு மனித உரிமை மீறல். விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் இந்த விவகாரத்தை இணையவாசிகள் தீவிரமாக விமர்சித்து வருகின்றனர்.