பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் அந்த கட்சியின் சார்பில் நாடாளுமன்ற எம்பி ஆக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் பதவிக்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு செல்வது மிகவும் குறைவாகவே இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அவர் பாஜக கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் நடிகர் மிதுன் பற்றிய ஒரு சுவாரசிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது முன்னணி நடிகர்கள் பலரும் சொத்துக்கள் வாங்குவதிலும் ஆடம்பரமாக செலவு செய்வதிலும் ஆர்வம் காட்டும் நிலையில் நடிகர் மிதுன் நாய்களுக்காக பல கோடி ரூபாய் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார். அதாவது தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்காக அவர் ரூ.45 கோடி சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். அதோடு தன்னுடைய நண்பர்கள் வளர்க்கும் நாய்களுக்காகவும் செலவு செய்கிறாராம். இவருக்கு மும்பை அருகே உள்ள மட்  தீவில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு சுமார் ஒரே நேரத்தில் 116 நாய்களை வளர்த்து வருகிறார். மேலும் இந்த நாய்களை பராமரிக்க அவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒதுக்கிய நிலையில் அவருடைய செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.