தொடர் வீழ்ச்சிக்கு பின்னர் அதானி குழும பங்குகள் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. அதானி குழுமம் பங்கு சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க் கடந்த மாதம் 24 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. பங்கு சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவு காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து பங்கு சந்தையில் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.

இதனால் அதானி நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அதானி குழும பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைய இருந்தன. இந்நிலையில் இன்று தேசிய பங்கு சந்தைகள் தொடங்கியதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் விலை ஏற தொடங்கியது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி அதானி நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1372 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நேற்றைய விலையை விட 15 சதவீதம் அதிகமாகும். அதானி குழுமம் பழைய நிலைக்கு திரும்பும் என முதலீட்டார்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.