சமூக வலைதளங்களில் அதிமுக ஐ.டி விங் பிரிவினர் அநாகரிகமாக யாரையும் விமர்சிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் ஐ.டி விங்கின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் சமூக வலைத்தளங்கள் செயல்பாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விதமான அறிவுரையை அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு கொடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் ஈபிஎஸ், சமூக வலைதளங்கள் வாயிலாக செயல்படும் அதிமுக ஐ.டி விங் யாரையும் மரியாதை குறைவாகவோ, நாகரீகமற்ற முறையில் விமர்சிக்கவும் கூடாது.

மரியாதை குறைவாக நாகரிகம் மற்றும் முறையில் நிர்வாகிகள் மீது நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிற கட்சிகளின் ஐ.டி விங் போல் வெறுப்பை உண்டாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிமுக ஐ.டி விங் எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் என கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் நிர்வாகிகளின் செயல்பாடுகளை ரகசியமாகவோ, நேரடியாகவோ கண்காணிக்க 7 குழுக்கள் அமைத்திருப்பதாகவும், அந்த குழுவில் உள்ளவர்கள் ஐ.டி விங் நிர்வாகிகளின் செயல்பாடுகளை மறைமுகமாக கண்காணிப்பார்கள். தனக்கு ரிப்போர்ட் கொடுப்பார்கள். அதனால் யாரையும் மரியாதைக்குரியதாக பேச வேண்டாம் என ஈபிஎஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதேபோல அதிமுக அரசின் 2011ல் இருந்து 21-ல் வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள், திமுக செய்ய தவறிய தவறுகளை மற்றவர்களிடம் ஆக்கபூர்வமான முறையில் கொண்டு செல்லுங்கள் என அறிவுரை வழங்கியதாக ஐ.டி விங் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்..