இந்தியாவிலேயே மிக உயரமான தேசியக்கொடி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி எல்லையில் நிறுவப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று நிறுவப்பட்ட இந்த தேசியக் கொடியின் உயரம் 418 அடி ஆகும். இதற்காக நடந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் பங்கேற்றார்.

இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கர்நாடக மாநிலம் பெளகாவி பகுதியில் தான் நாட்டிலேயே உயரமான தேசிய கொடி இருந்தது குறிப்பிடத்தக்கது.