நாடு முழுவதும் மலிவுவிலை ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்ய புதிதாக 15,000 மக்கள் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக ரசாயனம் அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், “PMBJP மூலம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள மக்களுக்கு மருந்துகள் எளிதில் சென்றடையும். 1800 உயிர் காக்கும் மருந்துகள் & 285 அறுவை சிகிச்சை பொருட்கள் இங்கு விற்கப்படும்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால், மாதந்தோறும் ரூ.3000 பில் வருகிறது. மக்கள் மருந்தக மையங்கள் மூலம், 100 ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை, 10 முதல், 15 ரூபாய்க்கு வழங்குகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.