தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன், ரோஜா, அழகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மதுபாலா மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாவிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சந்தித்த இன்னல்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நடிகைகள் மலைப்பகுதிகள், குகைகள், மர நிழல்கள் போன்ற இடங்களில் தான் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் இருக்கும்.

அதேபோன்று நடன காட்சிகளில் நடிக்கும்போது திறந்த வெளியில் உடை மாற்ற வேண்டும். அப்போது யாராவது பார்க்கிறார்களா என்பது கூட தெரியாது. நான் மணிரத்தினம் இயக்கிய இருவர் படத்தில் நடித்த போது உணவு இடைவேளைக்கு பிறகு பாறையில் படுத்து தூங்கினேன். அப்போது ஒருவர் இவ்வளவு பணம் சம்பாதித்து என்ன பயன். பாறையில் படுத்து தூங்க வேண்டிய நிலை தானே இருக்கிறது என்று சொன்னார். அதெல்லாம் மிகவும் சங்கடமாக இருக்கும். ஆனால் தற்போது அந்த மாதிரியான நிலை இல்லை. மேலும் இது வரவேற்புக்குரியது என்று கூறியுள்ளார்.