ஐந்து நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்பதற்காக உரிமம் பெறுவதற்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான விற்பனை செய்ய உரிமம் பெரும் கட்டணம் 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாய் ஆகும், 4நட்சத்திர விடுதிகளின் மதுபானம் விற்பதற்கான உரிமம் 12 லட்சத்திலிருந்து 15 லட்சம் ஆகவும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் நட்சத்திர விடுதிகளில் மதுபான விலை உயரும் என கூறப்படுகிறது.