இயக்குனர் பாரதிராஜாவின் “கிழக்கே போகும் ரயில்” என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்ததை அடுத்து ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்தார். தற்போது சீரியல்களிலும், படங்களிலும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் சரத்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் நடிகர் ராதிகாவின் மருமகன் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது பலரும் அறியாதது. அவர் பெயர் அபிமன்யு மிதுன். அவரை தான் ராதிகாவின் மகள் ரயானே திருமணம் செய்துள்ளார். அபிமன்யு இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடி உள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.