தமிழ் சினிமாவில் ஒரு இண்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட் ஆக இருந்து இசையமைப்பாளராக மாறியவர்தான் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். ஹீரோவாகவும் இசையமைப்பாளராகவும் கலக்கி கொண்டிருந்த ஹிப்ஹாப் ஆதி சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

பின்பு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். PT சார் எனும் ஹிட் படம் கொடுத்தார். மேலும் இசையமைப்பாளராக அரண்மனை-4 என்ற படத்தை கொடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று தன்னுடைய 35 வது பிறந்த நாளை கொண்டாடும் ஹிப்ஹாப் ஆதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க மூன்று கோடி முதல் ஏழு கோடி வரை சம்பளம் பெறுகிறார். அந்த வகையில் இவருக்கு 10 கோடி முதல் 15 கோடி வரை சொத்துக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.