தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். இதற்காக அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. புதிய கட்டிட பணிகளை முடிப்பதற்கு 40 கோடி நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினர். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும் இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார்.