பொதுவாக நம்முடைய மொபைல் போனுக்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் சில சமயங்களில் வரும். இந்த தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக அமையும். இந்நிலையில் தற்போது மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் SPAM அழைப்புகளை தடுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு (AI) Spam Filter பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) Spam Filter-ஐ உருவாக்க தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வருகிறது.