பிரதமரின் ஷ்வநிதி திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் நோக்கத்தில் பல உயர்மட்ட மறு ஆய்வு மற்றும் கண்காணிப்பும் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் பிரச்சாரம் அமைக்கப்பட்டது.

இதன் முடிவில் திட்டத்தின் மூலமாக 50 லட்சத்திற்கும் அதிகமான தெருவோர  வியாபாரிகள்  பயன்பெறும் விதமாக  65.75 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகளும் முக்கிய பங்காற்று உள்ளது. தெருவோர வியாபாரிகள் தொழிலாளர்களுக்கு கடன் வழங்கவும் புது தொழில் நடத்த ஊக்குவிக்கவும் அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.