தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறுவயதிலேயே இதற்கு அடிமையாகி வருகிறார்கள் .இதனால் அசம்பாவிதங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அரசு புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது,. அதாவது போதைப்பொருள் அதிகரித்திருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள்., பஸ் நிறுத்தங்கள் மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .

பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அருகே இயங்கும் பெட்டி கடைகள், பேக்கரியில் , பழச்சாறு கடைகள் தேநீர் கடைகள் என அனைத்திலும் சாக்லேட் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சந்தேகப்படும்படியாக ஏதாவது தெரியாத பெயரில் சாக்லேட் பிஸ்கட் விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து போலீஸிடம் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.