இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. இந்த செல்போனில் ஏராளமான நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும் அதிகளவில் தீமைகளும் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் யூடியூப் வீடியோ பார்த்து 5ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஹமிர்பூர் நகரத்தை சேர்ந்தவர்கள் அவதேஸ் சாஹூ – ரூபி தம்பதியினர்.

இவர்களுக்கு நிகில் என்ற 11 வயது மகனும் ஒரு மகளும் உள்ளனர். 5ஆம் வகுப்பு படித்து வந்த நிகில், வீட்டில் தனியாக இருக்கும்போது செல்போன் பார்த்துள்ளான். ‘தூக்குமாட்டிக்கொண்டு அதில் இருந்து தப்பித்து எப்படி உயிருடன் வருவது’ என்ற வீடியோவை நிகில் பார்த்துள்ளான். இதற்காக தாயின் துப்பட்டாவை கொண்டு தூக்கிட்டபோது, துரதிஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.