யானைக்கு அழகே அதன் தும்பிக்கைதான். அதனைப் பார்த்தாலே கம்பீரமும், பயமும் தோன்றும். ஆனால் கேரள வனத்துறையினர் தும்பிக்கை இல்லாத யானை ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அடர்ந்த வனப்பகுதியில் தும்பிக்கையின்றி குட்டி யானை இருப்பதை கண்டு வனத்துறையினர் கவலை அடைந்தனர்.

யானைகள் தண்ணீர் குடிக்கச் செல்லும்போது முதலைகள் தாக்கும் அபாயம் உள்ளதுடன், உயரமான கூர்மையான வேலி உலோக கம்பிகளில் அடிபட்டு தும்பிக்கைகள் அறுந்து விழும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. குட்டி யானையின் இந்த பரிதாபகர காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.