தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12-ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

அதன்படி காலை நேரத்தில் இந்து  முறைப்படி கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் நடைபெற்ற நிலையில் மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.இதன்பின்னர் கீர்த்தி சுரேஷ் நிகழ்ச்சிகளுக்கு கழுத்தில் மஞ்சள் கயிற்றோடு சென்ற வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவரோடு நடத்திய பார்ட்டியில் செம கிளாமராக இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.