
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நிலையில், இன்று தன்னுடைய 74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வேட்டையன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பகத் பாசில், ஸ்ருதிஹாசன், பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கூலி படத்தின் அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியான போது தங்கக் கடத்தலை மையப்படுத்தி படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது படத்தின் பாடல் வெளியாகி உள்ளது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் நிலையில் தற்போது கூலி படத்தின் பாடல் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.