சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு தன்னார்வலர்களை பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, பிரதமர் மோடியின் சிந்தனையால் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதுவும் மிகவும் குறைவான காலத்தில் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால் எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என கூறுகின்றார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு.

முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். மேலும் உலக நாடுகளுக்கு அடுத்த 25 வருடங்களுக்கு இந்தியா தான் தலைமையாக இருக்கப் போகிறது என கூறியுள்ளார் . இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் தமிழ்நாடு என்ற #ஹேஸ்டேக் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு என்ற பெயர் எதற்காக வைக்கப்பட்டுள்ளது என முதல்வர் கருணாநிதி கொடுத்த விளக்கம் தற்போது வைரலாக பரவி வருகிறது