சென்னை மின்வாரியத்துறை அலுவலகத்தில் நேற்று ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக 19 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மின்வாரிய ஊழியர்களின் காலி பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு மற்றும் அகலவிலைப்படி உயர்வு போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. அதேசமயம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அன்று வழங்கப்பட உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் படி ஊழியர்களுக்கு ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கூடுதலாக மூன்று சதவீதம் வெயிட்டேஜ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.