தமிழகத்தில் பொதுவாகவே மார்ச் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடும். அதுவே மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் மக்கள் வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள குளிர்ச்சியான பானங்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இது தவறானது என மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில், டீ காபி, மதுபானம், கார்பன் ஏற்றம் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் காலை 11:00 மணி முதல் மதியம் மூன்று மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக புரத சத்துள்ள உணவுகள், பழைய உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும், அதிகமாக உடல் வெப்பநிலை ஏற்பட்டு மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டால் 108 அல்லது 104 அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக மருத்துவ துறை சார்பாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது