தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களுக்கு உள்ள பிரச்சனைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை இந்த குறை தீர்ப்பு கூட்டத்தின் மூலமாக அரசு நிவர்த்தி செய்து வரும் நிலையில் மாநகராட்சி சார்பாக கோவை மாவட்டத்தில் சமீபத்தில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக குறைகளை தெரிவிப்பதற்கு தொலைபேசி எண்களும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. அதேசமயம் பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக புதிய திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது தமிழகத்தில் சொத்துவரி விதிப்பு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு என அனைத்து வகையான கருத்துக்களையும் மக்கள் தெரிவிப்பதற்கு தமிழகம் முழுவதும் க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சியின் கமிஷனர் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக பொதுமக்கள் ஆண்ட்ராய்டு செல்போனில் qr கோடு ஸ்கேன் செய்து தங்களின் புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.