தமிழகத்தில் பொதுமக்களின் நலனுக்காக போக்குவரத்துக் கழகம் சார்பாக புதிதாக 2000 பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்ட நிலையில் அதற்காக தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வரும் பழைய பேருந்துகள் அனைத்தும் மறு சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மஞ்சள் நிறத்தில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

அதில் முதல் கட்டமாக 100 பேருந்துகள் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் கூடுதலாக நான்காயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு அதில் 1400 பேருந்துகள் புனரமைக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். புதிய பேருந்துகள் பொதுமக்களின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் கூடுதலாக போக்குவரத்து தொழிலாளர்கள் படிநியமனம் செய்யப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.