தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தேர்தல் பணிகளை முன்னிட்டு முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து 5.5 லட்சம் மாணவர் சேர்க்கைகளை முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பள்ளி கல்வித்துறையின் தற்போதைய மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் என அனைத்தையும் விளக்கி பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி தங்களுடைய பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் அரசு பள்ளிகளில் ஆங்கில கல்வி முறை எங்கெங்கு உள்ளது பற்றிய விவரங்களும் மாணவர்களை பள்ளியில் சேர்க்க தேவையான ஆவணங்கள் பற்றிய விவரங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் ஆசிரியர்கள் சிலர் பெற்றோர்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் தெரிகிறது. இதனால் ஹெல்ப்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களில் மட்டும் 40 ஆயிரம் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளனர்.