விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

விழுப்புரம் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று செங்கல்பட்டு விவகாரம் தொடர்பாக அதிகாரி ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை மேற்கொள்கிறார்.

முதல்வரின் உத்தரவின் படி இந்த வழக்கை குற்றபிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமைய இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். மேலும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.