தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து 11 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்தது. தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 100 சதவீதம் தேர்ச்சி வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க அரசு விதிகளின்படி குறைந்தது 75% வருகைப்பதிவு அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.