தமிழகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடப்பு ஆண்டு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்திவரப்படும் ஜூலை மாதத்திற்கான பயிற்சி முகாம் ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாடு குறித்து பயிற்சி வழங்கப்படும். இதில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து பாடங்களுக்கான கற்றல் விளைவுகள் மற்றும் கற்றல் மதிப்பீடு குறித்து பயிற்சி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.