தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் திருக்கோவில்களுக்கு அர்ச்சகர் மற்றும் அறங்காவலர் உள்ளிட்ட பிறர் ஊழியர்கள் என அனைவரும் அரசு விதிகளுக்கு உட்பட்ட நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழக திருக்கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் கோவில்களுக்கு ஓராண்டுக்குள் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 30 மாவட்டங்களுக்கு அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மூலமாக தற்போது அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது அறநிலையத்துறையின் கேள்வி இயங்கும் 2500 கோவில்களில் திருப்பணிகள் வழக்கம் போல நடைபெற்ற வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்