தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளைப் போர்டு கொண்ட பேருந்துகளிலும் கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றன. சொல்லப்போனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 39.21 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மகளிருக்கான கட்டணம் இல்லா பயணத்திட்ட மூலமாக இதுவரை அரசு பேருந்தில் 258 கோடி பேர் பயனடைந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த திட்ட மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் 888 ரூபாய் மாத செலவில் சேமிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மொத்த நகர பேருந்துகளில் 7164 சாதாரண நகர பேருந்துகள் மகளிர் கட்டணம் இல்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.