சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மே மாத இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.