மோட்டார் வாகன சட்டத்தின்படி பொதுவாகவே 15 வருடங்கள் நிறைவடைந்த வாகனங்கள் பதிவானது ரத்து செய்யப்பட்டு அதன் பிறகு அவை கழிவோடு சேர்க்கப்படுகிறது. இதன் மூலமாக மக்களுடைய பாதுகாப்பு உறுதி செய்வதுடன், தேவையற்ற விபத்துக்கள் நடப்பதையும் தடுக்க முடிகிறது. இந்த நிலையில் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா தமிழகத்தில் 15 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் உள்ள பேருந்துகள் உள்ளிட்ட அரசு வாகனங்கள் இயக்கம் தொடர்பாக முக்கிய உத்தரவு போன்ற பிறப்பித்துள்ளார். அதாவது மொத்தம் 10 ஆயிரத்து 730 வாகனங்கள் 15 ஆண்டுகள் நிறைவடைந்ததாக உள்ளது.

இவற்றை உடனடியாக ரத்து செய்தால் மக்களுடைய பல்வேறு பணிகளும் பாதிக்கப்படும் சூழல் நிலவும் என்று போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்திருந்தது. 15 வருடங்கள் நிறைவடைந்த வாகனங்கள் மேலும் ஒரு வருடங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் வேண்டுகோள் வைத்திருந்தது. இந்த வேண்டுகோளை ஏற்று செப்டம்பர் 30, 2024 வரை 6,341 வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மீதமுள்ள வாகனங்களின் பதிவு காலம் மிக அதிகமாக உள்ளதால் இவற்றை கழிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.