தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்ட நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் . அதன் பிறகு பேசிய அமைச்சர், பள்ளி கல்வித்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாள பல கட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பங்கு என்பது முக்கியம் எனவும் தெரிவித்தார்.

மேலும் 10 முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா வங்கிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட நிலையில் கொரோனா காலத்திற்குப் பிறகு அது தயார் செய்யப்படவில்லை. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வினா வங்கி புத்தகங்கள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.