தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் அதன் பிறகு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் மதுரையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையம் ஒன்றில் திருத்தப்பட்ட இரண்டு மாணவர்களின் விடைத்தாளில் ஒரே கையெழுத்து இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதனைப் போலவே இருவருமே 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த விவகாரம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் இரண்டு விடைத்தாள்களும் மதுரையை சேர்ந்த ஒரே பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுடையது என கண்டறிந்தனர்.

அவர்கள் இருவருமே அருகே அமர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் போது அந்த பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை எனவும் போலீசார் கண்டறிந்துள்ளனர். அதனால் அந்த மாணவர்கள் இருவரும் தேர்வின் போது கண்காணிப்பு பணியாற்றி ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்தும் முகாமில் விடைத்தாளை கலக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் என பதினைந்துக்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.