தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து இலங்கை கடல் பகுதிகளை சென்றடைய கூடும். இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர், கிண்டி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதனைப் போலவே திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.