தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையும் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டாசு சில்லறை விற்பனை தற்காலிக உரிமம் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் கடை அமைப்பதற்கான விவரங்களை சரியாக கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபர்கள் அதே இடத்தில் கடை வைப்பதற்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் தற்காலிக பட்டாசு உரிமம் பெறுவதற்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் இ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த தேதிக்கு மேல் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.