தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக சாலை விதிகளை மக்கள் முறையாக பின்பற்ற அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செல்வது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய போக்குவரத்து விதிகளின்படி தீயணைப்பு வண்டி மற்றும் ஆம்புலன்ஸ் சொல்லிட்டு அவசர வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில் இதனை தொடர்ந்து மேலும் ஒரு புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. அதாவது இனி உங்கள் வண்டியை உங்கள் நண்பர் எடுத்து ஓட்டும் போது அவர் சாலை விதியை மீறினால் வாகனம் ஓட்டிய அவருக்கு தான் அபராதம் விதிக்கப்படும். பொதுவாகவே சாலைகளில் விதிகளை மீறும் போது வண்டிஎண்ணை  வைத்து வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும். இப்படியான நிலையில் வாகனத்தில் உரிமையாளரான நீங்கள் வண்டியை ஓட்டவில்லை என்பதற்கான ஆதாரத்தை காவல்துறையினரிடம் சமர்ப்பித்தால் அபராதம் நீக்கப்பட்டு வண்டியை ஓட்டிய நபர் மீது அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.