தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களின் நலனை கருதி அரசு சார்பில் பல நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தொழிலாளர் ஆணையத்தின் சார்பாக கட்டுமான தொழிலாளர்களுக்கான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வெளி மாநில கட்ட ிட தொழில் பணியின்போது விபத்தினால் உயிரிழக்கும் பட்சத்தில் அந்த உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு நிதி உதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதே சமயம் தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் கட்டிடம் கட்டும்போது அரசிடம் அதற்கான அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெறாமல் கட்டடம் நிறைவு சான்றிதழ் வழங்கப்படாது எனவும் அனுமதி பெறப்படாமல் கட்டும் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு அடுத்து ஆறு மாதத்திற்குள் அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.